கனடா கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் குறித்து வடக்கு முதல்வர் விளக்கம்
முல்லைத்தீவு- மார்க்கம் மற்றும் பிளம்ரன்- வவுனியா உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்கள் அதிகளவான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் வடமா காண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அந்த உடன்படிக்கை காத்திரமானது அல்ல என பலர் விமர்சிப்பதற்கு காரணம் அவை தற்போது தொடக்க நிலையில் இருப்பதேயாகும் எனவும் கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அண்மையில் வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற் கெண்டு முல்லைத்தீவு- மார்க்கம், மற்றும் வவுனியா- பிளம்ரன் ஆகிய நகரங்களுக்கிடையிலான இரு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தார்.
மேற்படி உடன்படிக்கைகள் தொடர்பாகவும், அதனால் வடக்கு மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அண்மையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு மேற்படி இரு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருக்கின்றேன்.
இந்த உடன்படிக்கைகளை சகோதரி நகர் உடன்பாடு, நட்புறவு உடன்பாடு என வகைப்படுத்துவார்கள்.
இதில் முதற்கட்டமாக நட்புறவு உடன்பாட்டையே செய்வார்கள். அவ்வாறு நட்புறவு உடன்பாடு செய்யப்பட்டால் அது நடைமுறை ப்படுத்தப்பட்டே ஆகவேண்டும். அதன் பின்னர் சகோதரி நகர் உடன்பாடு கைச்சாத்திடப்படும்.
இந்நிலையில் நாங்கள் தற்போது பூர்வாங்க ஆய்வுகளை நடத்தி நட்புறவு உடன்பாட்டை செய்திருக்கின்றோம்.
அதன் பின்னர் அடுத்த கட்டம் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கூடிய வலுவுள்ளவற்றை செய்யாமல் இதை செய் கிறீர்களே? என சிலர் கேட்கிறார்கள். இந்த உடன்படிக்கை ஒரு பூர்வாங்க நடவடிக்கையாகவே செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கையில் ஒன்றுமே இல்லாமல் வெளிநா டு சென்ற ஒருவர் தற்போது வெளிநாட்டில் மிக நல்ல நிலையில் வாழ்கிறார். அவர் இங்கே பல திட்டங்க ளை செய்ய விரும்புகிறார்.
அதனடிப்படையில் தற்போது அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் செய்யப் படுகின்றது. அவர் நிச்சயமாக செய்வார். இப்படி பலர் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள்.
எனவே இந்த உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்களுக்கு பலன நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள் ளது. குறிப்பாக பாரிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கா ன செயற்றிட்டங்களை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு பல திட்டங்களை செய்யலாம். அதற்கான பூர்வாங்க ஆய்வுகளை செய்து வருகின்றோம்.
இந்நிலையில் இந்த உடன்படிக்கைகள் காத்திரமானது அல்ல என விமர்சிக்கப்படுவதற்கு காரணம் இவை தொடக்க நிலையில் இருப்பதேயாகும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.