கனடாவின் தென் கிழக்கு பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்கோசியா மாகாணத்தில் வழமைக்கு மாறாக சீரற்ற காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு தொடர்ந்து விடுமுறை வழங்குவதன் காரணமாக பாரிய நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சீரற்ற காலநிலையின் போது மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டில் இது வரையான கால்பகுதியில் 12 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹலிஃபக்ஸ் பாடசாலை ஆலோசனை இயக்குநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.