கனடாவில் 62 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதியினரை பிரித்த கொடுமை: பேத்தியின் உருக்கமான பதிவு

கனடாவில் 62 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதியினரை பிரித்த கொடுமை: பேத்தியின் உருக்கமான பதிவு

கனடாவில் முதியோர் இல்லத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக வயதான தம்பதியரை 62 ஆண்டுகளுக்கு பின்னர் பிரிந்து வாழ வற்புறுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Surrey பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 83 வயதான Wolfram Gottschalk மற்றும் அவர் மனைவி Anita(81) ஆகிய தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதியருக்கு ஒரே அறையில் தங்கிக்கொள்ள இனி அனுமதி இல்லை எனவும் வெவ்வேறு அறைகளில் தங்கி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

62 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியரை மிகவும் தள்ளாத வயதில் பிரிந்து வாழ செய்வது மிகவும் கொடுமையானது என அவர்களது பேத்தி தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருதய நோய் காரணமாக Gottschalk அங்குள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மிகவும் வருத்த மடைந்த அவரது மனைவி தமது கணவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என அந்த இல்லத்தின் நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட அறையில் இருவர் தங்கிக்கொள்ளும் வகையில் வசதிகள் இல்லை என்பதால் இந்த கோரிக்கையை அந்த இல்லத்தின் நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

இதனைடையே அவர்களது பேத்தி Ashley Baryik தமது பேஸ்புக் பக்கத்தில் அந்த முதியவர்களின் புகைப்படத்தையும் இணைத்து, அவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும், அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள Anita தினசரி 30 நிமிடங்களாவது அவரது கணவரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், அப்படி சந்திப்பு நடந்தால் மட்டுமே இவரது ஞாபகத்தில் அவர் இருப்பார் எனவும் உருக்கமான பதிவை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News