கனடாவில் வன்முறைகள் குறைவான இடமாக பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் தெரிவு
கனடாவில் வன்முறைகள் குறைந்த பகுதியாக, பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் விளங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறைச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு, கனடாவின் பல்வேறு பாகங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில்; தேசிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் சராசரி 74.48 சதவீதம் ஆகும். எனினும் பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டில் குற்றச்செயல்களின் சதவீதம் சராசரியாக 40.82 என்ற அளவிலேயே உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது கனடாவின் சராசரியாக இடம்பெறும் குற்றச்செயல்களின் சதவீதத்தைக் காட்டிலும் 55 சதவீதம் குறைவானதாகும்.
வன்முறையுடன் கூடிய குற்றச் செயல்கள் குறைந்த அளவில் இடம்பெறும் மாநிலமாக பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டிற்கு அடுத்த நிலையில், ஒன்ராறியோ பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோவில் அவ்வாறான சம்பவங்களில் சதவீதம் சராசரியாக 59.23 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் பிறின்ஸ் எட்வேர்ட்டில் கொலைச் சம்பவங்களும் ஒரு சிலவே இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவில் அதிக அளவில் இவ்வாறான குற்றச் செயல்கள் மனிட்டோபா மாநிலத்திலேயே பதிவாகி வருவதை அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.