கனடாவில் மிகவும் ஆபத்தான நகரம் எது தெரியுமா? ஆய்வு தகவல்!
கனேடியர்களிடம் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், நகரங்களிலேயே மிகவும் பாதுகாப்பு குறைவானதும், ஆபத்தானதுமான நகரமாக வின்னிப்பெக் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.4,000 இற்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட குறித்த கருத்துக் கணிப்பினை, “Mainstreet Research and Postmedia” எனப்படும் நிறுவனம் முன்னெடுத்திருந்தது.
நகரங்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வில் 15 நகரங்கள் இடம்பெற்றிருந்தன.அந்த வகையில், கலந்து கொண்டோரில் 72 சதவீதத்திற்கும் அதிகமானோர், கனடாவில் சிறந்த பாதுகாப்பு கொண்ட நகரமாக ஒட்டாவாவை தேர்வு செய்துள்ளனர்.
அந்த வகையில் Charlottetown, Moncton, St. John’s, Quebec City ஆகியன முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் ஏனைய பிரபல நகரங்களில், வன்கூவர் ஒன்பதாவது இடத்திலும், கல்கரி பத்தாவது இடத்திலும், எட்மண்டன் 11ஆவது இடத்திலும், மொன்றியல் 13ஆவது இடத்திலும் ரொரன்ரோ 14ஆவது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் இறுதி இடமான 15ஆவது இடத்தில் வின்னிபெக் பட்டியலிடப்பட்டு, நாட்டில் மிகவும் ஆபத்தான நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.