கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார்.

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார்.இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமலன் தண்டபாணிதேசிகர் என்ற இலங்கையர் நேற்று கனடா நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தனது பக்கத்து வீட்டவரான ஜெயராசன் மாணிக்கராஜாவுடன் முரண்பாடு காணப்பட்டது. தனது மனைவியை அவர் தொடர்ந்து அவமதிப்பதாக உணர்ந்தேன்.

மாணிக்கராஜா அடிக்கடி தனது மனைவிக்கு விசிலடித்து கிண்டல் செய்துள்ளார்., அது எனது கலாசாரத்தை மிகவும் அவமதிக்கும் விடயமாக எண்ணினேன் என தெரிவித்துள்ளார்.

அமலன் மற்றும் மாணிக்கராஜா ஆகிய இருவரும் இலங்கையில் நன்கு பரீட்சயமானவர்கள். அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி அவர் ஓரளவு மதுவை அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரருடன் பல முறை வாதிட்டுள்ளார். ஒரு கட்டத்தில், “நான் ஒரு மனிதனாக இருக்கிறேன், என்னை ஒரு மிருகமாக மாற்றிவிடாதீர்கள்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் மாலை தண்டபானிதேசிகரை அடுத்த கதவில் இருந்த அழைத்த மாணிக்கராஜா அவரை அவமானப்படுத்தியுள்ளார்.

இதன்போது தண்டபானிதேசிகர் சமையலறையில் இருந்து ஒரு கத்தி எடுத்து சென்று மாணிக்கராஜாவை எச்சரிக்க எண்ணியுள்ளார். எனினும் அது விபரீதத்தில் முடிந்துள்ளது.

சிறிது நேரத்தில் படுகாயமடைந்த மாணிக்கராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் வழக்கு விவாதங்களை நிறைவு செய்த நீதிபதி மீண்டும் அடுத்த வாரம் வழக்கு தொடரும் என அறிவித்துள்ளார்.

http://montreal.ctvnews.ca/stabbing-suspect-charged-with-first-degree-murder-1.1885022

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News