றோயல் கனடிய மின்டினால் வெளியிடப்பட்ட எண்ணற்ற தங்க நாணயம் ஜேர்மனி மியுசியத்திலிருந்து திருடப்பட்டு விட்டது.
திருடர்கள் ஜேர்மன் தலைநகரின் போட் மியுசியத்தை திங்கள்கிழமை உடைத்து நுழைந்து 100-கிலோ கிராம் எடையுள்ள- மில்லியன் டொலர்கள் பெறமதியா தங்க நாணயத்தை களவாடி விட்டதாக பேர்லின் பொலிசார்தெரிவித்துள்ளனர்.
“Big Maple Leaf” நாணயம் 3-சென்ரி மீற்றர்கள் தடிப்பு 53-சென்ரி மீற்றர்கள் குறுக்களவையும் கொண்டவை. பிரிட்டிஷ் இளவரசியின் படத்தை முகப்பில் கொண்டவை. உலகில் மிக பெரிய நாணய சேர்க்கைகள் எனவும் 2010-லிருந்து அதன் நாணயவியல் சேகரிப்பில் கடனாக இருந்த வருகின்றது என அதன் வலைத்தளத்தில் கூறப்படுகின்றது.
2007-ல் றோயல் கனடியன் மின்ரினால் வெளியிடப்பட்ட இந்நாணயம் அதன் 999.99/1000 தங்க தூய்மை காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் 2007-ல் இடம்பெற்றது.
இந்த நாணயம் றோயல் கனடிய மின்ரிற்கும் சொந்தமானதல்ல என தெரிவித்த மின்ட் பேச்சாளர் அலெக்ஸ் றீவ்ஸ்சொ,ந்த காரர் யார் என்பதும் தெரியாதென தெரிவித்தார்.
இதன் பார்வை மதிப்பு 1-மில்லியன் டொலர்கள் ஆனால் எடையளவில் சந்தை விலை கிட்டத்தட்ட 4.5யு.எஸ். டொலர்கள் பெறுமதியானதெனவும் தெரிவித்துள்ளார்.
10-வருடங்களிற்கு முன்னர் 5-நாணயங்கள் உருவாக்கப்பட்டன. திருடப்பட்டது ஐந்தில் ஒன்றாகும்.
திங்கள்கிழமை அதிகாலை 3.30மணியளவில் திருடர்கள் யன்னல் ஒன்றின் ஊடாக நுழைந்து நாணயம் வைக்கப்பட்டிருந்த கபினெட்டை உடைத்து திருடிக்கொண்டு பொலிசார் வருவதற்கு முன்னதாக தப்பி சென்றுவிட்டனர் என மியுசியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.