கனடாவில் பணம் பறிக்கும் மர்மநபர்கள்! பொலிஸார் எச்சரிக்கை
கனடாவில் குடியமர்வு அதிகாரிகள் என கூறிக்கொண்டு சிலர் பணம் பறிக்கும் செயலில் ஈடுப்பட்டு வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ நகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடியமர்வு துறையில் இருந்து பேசுவதாகவும், 2,500 டொலரை உடனடியாக செலுத்த வேண்டும் என குடியிருப்புவாசியிடம் தொலைப்பேசியில் மர்ம நபர் பேசுகிறார். நபர் கேட்ட பணத்தை தர மறுத்தால் பொலிஸிடம் புகார் அளிப்பேன் எனவும் அவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்த கட்டமாக, குடியிருப்புவாசி போல் பொலிஸாரை தொடர்புக்கொள்ளும் அந்த நபர் ‘எங்கள் வீட்டில் திருடர்கள் புகுந்துள்ளார்கள். உடனடியாக வந்து காப்பாற்றுங்கள்’ என புகார் அளிக்கிறான்.
புகாரை உண்மை என நம்பி பொலிஸார் அந்த வீட்டிற்கு செல்லும்போது குறிப்பிட்ட அந்த குடியிருப்புவாசிக்கு சிக்கல்கள் ஏற்படுத்துவது தான் அந்த மர்ம நபரின் நோக்கமாக இருக்கிறது.
இவ்வாறு, குடியமர்வு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு மர்ம கும்பல் தொடர்புக்கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/66083.html#sthash.f3fPlnQ5.dpuf