கனடாவில் தீ விபத்திலிருந்து குடும்பத்தினரைக் காப்பாற்றிய அதிசய பூனை..!
வீட்டில் தீ பற்றியப்போது, வீட்டிலிருந்தவர்களை பூனை ஒன்று காப்பாற்றிய, அதிசய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் கிளேர்மவுண்ட் நகரின், அல்பெர்ட்டா பகுதியில் வீடொன்றில் தீப்பிடித்தப்போது, அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை, தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் எஜமானியை கடித்து எழுப்பி தீயிலிருந்து வீட்டாரை காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.
மேலும் தீயணைப்புப் படையினருக்கு வீட்டார் தகவல் சொல்லவே, அவர்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பூனையை வீட்டு எஜமானியை கடித்ததால்தான், அவரது தூக்கம் களைந்து வீட்டிலிருந்த ஏனையவரின் உயிரையும், அவர்களது உடைமைகளையும் காப்பாற்ற முடிந்ததாக, குறித்த பூனையின் எஜமானி, அதிசய பூனையை நன்றியுடன் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.