கனடாவில் டிவி பார்ப்பதை தவிர்க்கும் மக்கள்! பின்னணி காரணம் இதோ
கனடாவில் கேபிள் நிறுவனங்கள் இந்த ஆண்டு கிட்டதட்ட 2,00,000 கேபிள் சந்தாதாரர்களை இழக்கும் என ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார்.
கனடியன் ரேடியோ-டெலிவிஷன் மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தால் (CRTC), மார்ச் 1ம் திகதி முதல் கேபிள் நிறுவனஙகள் அடிப்படை டிவி பேக்கேஜை 25 டொலர் அல்லது அதற்கும் குறைவாக வழங்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து சாதனை படைக்கும் அளவில் கனடியர்கள் தங்களது கேபிள் இணைப்பை ரத்து செய்து வருகின்றனர்.
ஒட்டாவா சார்ந்த ஆராய்ச்சியாளரான Mario Mota கூறயதாவது, கனடாவின் ஏழு முன்னணி பொதுத்துறை டிவி நிறுவனங்கள் தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வருகிறது.
மார்ச் முதல் செப்டம்பர் வரை 98.476 டிவி வாடிக்கையாளர்கள் ரத்து செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
25 டொலர் திட்ட அறிவிப்பும் எந்த விதத்திலும் உதவவில்லை, அடுத்த மாதம் வரும் விருப்பங்களுக்கு ஏற்ப சேனலை தேர்வு செய்து கட்டணம் செலுத்தும் திட்டமும் உதவியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஒரு புதிய திட்டததை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்