பிரித்தானியா, அமெரிக்காவை தொடர்ந்து கனடாவில் கூகுள் தனது Wifi சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் தற்போது ஒரு தனி யூனிட்டுக்கு $179 டொலர் விலையில் Wifi வசதியை கனடாவில் கொண்டு வந்துள்ளது.
மூன்று யூனிட்டின் விலை $439 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை இதற்கு முன்னர் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
சில மாதங்களாக இணைப்பு தொடர்பான பிரச்சனை, இண்டர்நெட் தடைபடுதல் போன்ற பிரச்சனைகளை கூகுள் Wifi சந்தித்து வருகிறது.
தற்போது எல்லா பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், வீட்டில் சிறந்த இன்டர்நெட் சேவையை பயன்படுத்த விரும்புவோருக்கு கூகுள் Wifi வரப்பிரசாதம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.