கனடாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணி
கனடாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணியை தொடங்கி வைத்து பிரதமர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி தலைநகர் டொராண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் மிக பிரமாண்டமான பேரணி நடத்தினார்கள். அதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து இலட்சக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர்.
பேரணி தொடங்க தயாராக நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கனடா பிரதமர் ஐஸ்டின் டிருடியோ அங்கு வந்தார். பின்னர் கனடா நாட்டின் தேசிய கொடியை அசைத்து பேரணியை தொடங்கிவைத்ததோடு, ஓரின சேர்க்கையாளர்களுடன் பேரணியில் பங்கேற்றார்.
அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் கைகுலுக்கியதுடன்,ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேரணியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லண்டோ ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 49 ஓரின சேர்க்கையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
– See more at: http://www.canadamirror.com/canada/65343.html#sthash.P1MhaG4n.dpuf