கனடாவில் இலங்கை தமிழருக்கான தண்டனை ஒக்டோபர் மாதத்தில்!
கனடாவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கடந்த வாரம் தண்டனை வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் தண்டணைஅறிவிக்கப்படும் என்று கனேடிய செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
லிங்கநாதன்; மஹேந்திரராஜா என்ற இவர் தாக்குதல் நடத்தியமை, இரண்டு பேரைதடுத்து வைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வாரம் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்று பரவலாக கனேடியஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது கனடாவின் உயர்நீதிமன்றத்தினால் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவரின் சட்டத்தரணிதெரிவித்துள்ளார்.