கனடாவில் கவுன்சிலராக பதவி வகிக்கும் இலங்கை தமிழர் அதிகாரப்பூர்வ தெற்காசிய பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டத்தை முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார்.
கனடாவை சேர்ந்தவர் நீதன் ஷான் (39) இலங்கை தமிழரான இவர் கடந்த 1995ல் அங்கிருந்து தனது 16வது வயதில் புலம் பெயர்ந்துள்ளார்.
கனடாவில் தனது பட்டப்படிப்புகளை முடித்த ஷான் கடந்த பிப்ரவரி 13ஆம் திகதி அங்கு நடைப்பெற்ற கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று டொரண்டோவின் நகர மண்டபத்தில் நடைபெற்ற தெற்காசிய பாரம்பரிய பண்டிகை விழாவை ஷான் தொகுத்து வழங்கினார்.
இதன் மூலம் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய முதல் தமிழ் கவுன்சிலர் என்ற பெருமையை ஷான் பெற்றுள்ளார்.
இந்த விழாவில் மேயர் ஜான் டோரி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுகுறித்து கூறியுள்ள ஷான், தெற்காசிய கனடியர்கள் டொராண்டோ நகரத்திற்குரிய கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய பங்களிப்பை அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், நம் இளைஞர்களை நாம் கொண்டாட வேண்டியது அவசியம் என கூறியுள்ள ஷான், நம் சமூகங்களின் வெற்றிக்கு அவர்கள் தான் உண்மையான அடையாளம் என கூறியுள்ளார்.
ஷான் ஏற்கனவே கனேடிய தமிழ் இளைஞர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குனர், தெற்கு ஆசியர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.