கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்த அகதிகள் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
சோமாலிய நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் கனடாவிற்குள் நுழைய முயன்ற போது அமெரிக்க எல்லை அதிகாரிகளிடம் அகப்பட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மூவரும் மனிரோபா எமசென் பகுதிக்கு அருகாமையில் வயல் வெளி ஒன்றின் ஊடாக கனடாவிற்குள் நுழைய முயன்ற சமயம் இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் இதே வழியால் 22 அகதிகள் நடந்து வந்து மனிரோபாவை அடைந்துள்ளனர். அதில் ஒரு நபரை அவசர சேவை பிரிவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நடந்த போது மிக கடுமையான குளிராக இருந்ததாக எல்லை பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் எல்லையை கடக்க முயன்ற போது இவருடன் சேர்ந்த மற்றவரகள் உள்ளூர் எரிவாயு நிலையம் ஒன்றிற்குள் காத்திருந்துள்ளனர்.
எல்லையை கடக்கும் வரை இவர்கள் பொறுத்திருந்ததாக கூறப்படுகின்றது. பிடிபட்டவர் நடுங்கியவாறு காணப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இவர்கள் மினியாபொலிசை சேர்ந்தவர்கள். கனடாவிற்குள் செல்லும் நோக்கத்துடன் புறப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இவர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என இவர்களை காப்பாற்றியவர் ஷெரிப்பிடம் கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.
நூற்று கணக்கான அகதி கோரிக்கையாளர்கள் இமெர்சன் எல்லைக்கு ஊடாக வயல் வெளிகளில் நடந்து கனடாவிற்குள் வந்ததாக ஜனவரி மாதம் முதல் அறிக்கை விட்டிருந்ததாக அறியப்படுகின்றது.
இவர்களில் கானாவை சேர்ந்த இரு அகதிகள் தோலுறைவு நோயினால் பாதிக்கப்பட்டு வினிபெக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இப்பிரச்சனை பொது மக்கள் கவனத்தை ஈர்த்தது.
கிறிஸ்மஸ் முதல் தினத்தில் கனடா- அமெரிக்கா எல்லைக்கு அருகில் நெடுஞ்சாலை 75ல் இச்சம்பவம் இடம்பெற்றது. கடுமையாக பாதிக்கப்பட்ட அகதிகள் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களை இழந்தனர்.
குறித்த நபர்களின் கதை பகிரங்கமானதை தொடர்ந்து பெண்மணி ஒருவர் மற்றும் இரண்டு வயது பிள்ளை உட்பட டசின் கணக்கான அகதி கோரிக்கையாளர்கள் மனிரோபா எல்லையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்போக்கு சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததால் வியாழக்கிழமை உள்ஊர் நகர அதிகாரிகள், ஆர்சிஎம்பி மற்றும் எல்லை பாதுகாவலர்களிற்கிடையில் இமெர்சனில் ஒரு அவசர கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.