கனடாவிற்குள் தமிழர்களைக் கடத்திவந்தவருக்குப் பிணை மறுப்பு

கனடாவிற்குள் தமிழர்களைக் கடத்திவந்தவருக்குப் பிணை மறுப்பு

எம். வி. சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்கும் 492 தமிழர்களைக் கடத்த உதவிய ஒருவருக்கு, அவரது வழக்கு மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர், பிணை மறுக்கப்பட்டுள்ளது.

குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா என்பவர், அவருக்குச் சொந்தமான எம்.. வி. சண் சீ என்ற கப்பல் ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்ம்பியாக் கடலில் இடைமறிக்கப்பட்ட பின்பு, கைது செய்யப்பட்டார். இக்கப்பல் பசிபிக் சமுத்திரத்தின் ஊடாகப் பயணம் செய்தபோது ஒருவர் மரணமடைந்தார். கப்பலில் இருந்த ஏனைய 492 பேர் கனேடிய அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டனர்.

குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா என்பவரும், இன்னும் ஐந்து பேர் மீதும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டு ஆரம்பத்தில் சுமத்தப்பட்டது.

பெப்ரவரி 2013 இல், பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் வன்கூவர் நகரின் உயர் நீதிமன்ற நீதிபதி Jon Sigurdsson இனால், குணரொபின்ஸன் கிறிஸ்துராஜாவிற்கு பிணை மறுக்கப்பட்டது. இவ்வழக்கிற்கு விதிக்கப்பட்ட பிரசுரிப்புத்தடை காரணமாக இத்தீர்மானத்திற்கான காரணங்களை வெளியிட முடியாதுள்ளது. இவ்வைகையான பிரசுரிப்புத் தடைகள் கனேடிய வழக்குகளில் வழமையானவையாகும்.

பெப்ரவரி 2013 இல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை விசாரித்த நீதிபதி William Ehrcke இரண்டாம் தரமும் பிணை வழங்க மறுத்தார். நீதிபதி William Ehrcke இன் தீர்ப்புத்தொடர்பாகவும் பிரசுரிப்புத் தடைகள் அமுலில் உள்ளன.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News