கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிக்கோ நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிக்கோ நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிக்கோ நாட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைப்புற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 410ஆக இருந்த எண்ணிக்கை, இவ்வருடம் மார்ச் 9 வரையிலான காலப்பகுதியில் 444ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனேடிய மத்திய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம், மெக்சிக்கோ நாட்டவர்களிற்கான விசா தேவையை அகற்றியதைத் தொடர்ந்து உடனடியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 70 மெக்சிக்கோ நாட்டவர்கள் கனடாவில் அகதி கோரிக்கைக்காக விண்ணப்பித்துள்ளதாக அறியப்படுகின்றது. கடந்த 2012ஆம் 667 மெக்சிக்கோ நாட்டவர்கள், எல்லைபுற சேவைகள் அதிகாரிகளினால் நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

Next Post

வழமைக்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும்: சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வுகூறல் Krish March 23, 2017 Canada கனடாவின் பெரும்பாகங்களில் தற்போதைய வசந்த காலமானது, வழக்கத்திற்கு மாறாக அதிகளவான வெப்பத்துடன் காணப்படும் என்று கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், நோவா ஸ்கொட்டியா, நியூ பிரவுன்ஸ்விக், பிரின்ஸ் எட்வேர்ட் ஆகிய பகுதிகள் பனிக் காலத்தின் தாக்கத்திலிருந்து விடுபடும் முதல் பிராந்தியங்களாக காணப்படும் என்றும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறே ஏனைய பிராந்தியங்களிலும் பனிக் காலத்தின் தாக்கம் மிக விரைவில் குறைவடைந்து விடும் எனவும், நியூஃபவுண்ட்லான்ட் மற்றும் லேபடோர் ஆகிய பகுதிகள் வழக்கத்தினை விடவும் வெப்பம் குறைவான இடங்களாக காணப்படும் எனவும் சுற்றுச்சூழல் திணைக்கள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் பனிப்பொழிவுக் காலமும் சற்று தாமதமாகவே தொடங்கும் என்ற போதிலும், அந்த பனிப்பொழிவு மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/83421.html#sthash.0gyJ9Xz7.dpuf

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News