கனடா வங்கி கூட்டமைப்பின் 150-வது ஆண்டு நினைவை குறிக்கும் முகமாக புதிய 10-டொலர்கள் பணத்தாளை வெளியிட்டுள்ளது. கனடிய வரலாற்றில் நினைவிற்குரிய பணத்தாளை வெளியிடுவது இது நான்காவது தடவையாகும்.
கனடா வங்கியின் கவர்னர் ஸ்ரிபன் பொலொஸ் மற்றும் ஜினெட் பெற்றிபஸ் ரெய்லர் நிதி அமைச்சரின் பாராளுமன்ற காரியதரிசி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இதனை அறிவித்து வங்கியின் தலைமை காரியாலயத்தில் இப்பணத்தாளை காண்பித்தனர்.
மொத்தமாக 40-மில்லியன் தாள்கள் அச்சிடப்படும். ஒவ்வொரு கனடியரும் ஆளிற்கொன்றாக வைத்து கொள்ள இது போதுமானதாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.
யூன் மாதம் 1-ந்திகதி இது சுழற்சிக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது.
தாளின் முகப்பு கனடாவின் முதல் பிரதம மந்திரி சேர் ஜோன் எ.மக்டொனால்ட் மற்றும் சகா கூட்டமைப்பின் தந்தை Sir George-Étienne, கனடாவின் முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் அக்னெஸ் மக்பெயில் மற்றும் ஜேம்ஸ் கிளாட்ஸ்ரோன் கனடாவின் முதலாவது செனட்டர்-ஒப்பந்த முதல்தேச-கைன் ட்ரிப் ஆகியோரின் அம்ச உருவப்படங்களை கொண்டிருக்கும்.
தாளின் பின்புறம் பொது மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் கனடியர்கள் தாளில் என்ன விரும்புகின்றனர் என்பதை பொறுத்து கனடிய காட்சி வரிசைகள் இடம்பெறும்.
பணத்தாளில் சில பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும் என கனடா வங்கி தெரிவித்துள்ளது.
கண்கவரும் புதிய அம்சம் என்னவென்றால்
சாய்ந்த நிலையில் பார்க்கையில் நீல நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு நிறம் மாற்றும் காந்த மை ஒன்று உபயோகிக்கப்படுவதாகும்.