2017 பருவகாலத்திற்காக கனடாவின் விந்தையுலகம் ஞாயிற்றுகிழமை திறக்கப்படுகின்றது ஆனால் அதன் புதிய மெய்சிலிரக்கும் சவாரிகளில் ஒன்று தயார் நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவாரியின் உற்பத்தியாளர்களிடமிருந்து ஏற்பட்டுள்ள போக்குவரத்து தாமதம் காரணமாக குறிப்பிட்ட Soaring Timbers இன்று திறக்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சவாரி 32 சவாரியாளர்களை தாங்கி செல்லும் இரண்டு சுழலும் வெனிஸ் நகர தோணிகள் இரண்டும் ஒரு மைய அச்சில் தாமாகவே ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் என பார்க் கூறுகின்றது.
ஞாயிற்றுகிழமை நேரடி பொழுது போக்கு, மலிவு விலை உணவு வகைகள் மற்றும் மலிவு விலையில் ஆர்கேட் விளையாட்டுக்கள் போன்றன இடம்பெற திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ன் புதிய ஈர்ப்பாக Muskoka Plunge இடம்பெற உள்ளது-18மீற்றர்கள்-உயரமான நீர் சரிவுகளை கொண்டது.