கனடாவின் மொத்த விற்பனை வர்த்தகம் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
ஒட்டாவா-கனடிய மொத்த விற்பனை வர்த்தகம் ஜனவரியில் எதிர்பாராத வகையில் 3.3 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளது. இந்த மிகப்பெரிய மாதாந்திர முன்னேற்றம் கடந்த ஏழு ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களில் ஏற்பட்டுள்ள வலுவான விற்பனை இந்த ஏற்றத்திற்கான காரணம் என கனடா புள்ளிவிபரவியல் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு ஆய்வாளர்களினால் கணிக்கப்பட்ட ஆதாயத்தை விட 0.5சதவிகிதம் மிக பெரியதாக உள்ளது. 2009ல் காணப்பட்டதைவிட அதிகரித்துள்ளதுடன் விற்பனையும் சாதனையாக 59.09டொலர்கள் அதிகரித்துள்ளது.
விற்பனைகள் ஏழு துணைப் பிரிவுகளில் நான்கு அதிகரித்து மொத்த விற்பனை வர்த்தகத்தில் 55சத விகிதத்தை குறித்து காட்டுகின்றது.
மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் 17.1சதவிகிதம் எகிறியுள்ளதாக கூறப்படுகின்றது. 2005 ஆகஸ்டிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாதா மாத அதிகரிப்பு இதுவாகும்.
தனிப்பட்ட வீட்டு பொருட்கள் துணைப்பிரிபு 3.0சதவிகதம் அதிகரித்துள்ளது. பொழுது போக்கு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள்30.6 வரை உயர்ந்துள்ளது.