கனடாவின் பார்வை- ரூச் ரிவரில் தமிழினம் சாதிக்குமா?
இடைத்தேர்தல் எப்போதும் மக்களின் நாடிப்பிடிப்பை பார்க்கும் அளவுகோள்களாக அவ்வப்போது கொள்ளப்படுவதுண்டு. இந்தவகையில் வியாழக்கிழமை புரட்டாதி முதலாம் நாள் நடைபெறவுள்ள ரூச் ரிவர் இடைத்தேர்தலும் கனடா தழுவி அரசியலாளர்களால் உற்று நோக்கப்படுகிறது.
தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதி என்பது அனைவரின் பேசு பொருளாகியுள்ளது. புதிய சனநாயகக்கட்சி வேட்பாளர் நீதன் சானுக்கு சற்று அதிகரித்த வாயப்பு ஏனென்றால் அவர் பேசும் தமிழ் மொழியை பேசுபவர்கள் 45சதவீதம் அங்கு வாழுகின்றனர் என்கிறது கனடிய தேசிய தொலைக்காட்சி.
தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்த கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை இத்தொகுதி தமிழ் வாக்காளர்கள் முழுமையாக பயன்படுத்துவார்களா? என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.
ஏழு நாட்கள் நடைபெற்ற முன்கூட்டிய வாக்ககுப்பதிவில் வெறும் 4509 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இதில் வெறும் 1500 தமிழ் வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வாக்குகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் இன்னும் வாக்களிக்கவில்லை.
இவர்களுக்கு வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 9மணிவரை மட்டுமே வாக்களிக்க கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமாகும். இதன் போது பெருமளவில் திரண்டு வாக்களிக்க இவர்கள் தவறினால் முதல் ஒன்ராரியோ பாராளுமனற் தமிழ் உறுப்பினரை தெரிவு செய்யும் வாய்ப்பு இழக்கப்படுவது மட்டுமன்றி தமிழர் அதிகம் வாழும் தொகுதியிலேயே தமிழரை தெரிவு செய்ய முடியாதவர்களாகவும் அரசியலில் மிகவும் பலவீனமானவர்களாகவும் தமிழர் சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக மூத்த தமிழ் அரசியல் ஆய்வாளர் தெரிவித்தார்