கனடாவின் நயாகரா பிரதேசம் எட்டாவது உலக அதிசயமாகலாம்?
நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஒன்ராறியோவின் அருகாமையில் உள்ள வைன் நகரம் Niagara-on-the-Lake, எட்டாவது உலக அதிசயம் ஆக சேர்த்துக் கொள்ள சமூக ஊடகம் ஒன்று பிரச்சராத்தில் ஈடுபட்டுள்ளது.
கனடா பூராகவும் 74சதவிகதமான கனடியர்கள் நயாகரா பிரதேசம் உலக அதிசயங்களில் ஒன்றென நம்புகின்றனர். 78சதவிகிதமானவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
நயாகரா பிரதேசத்தில் காணப்படும் சிறப்பம்சங்களில், இப்பிரதேசம் 85-ற்கும் மேற்பட்ட வைன் ஆலைகளை கொண்டுள்ளது.1812 உலகப்போரின் சரித்திரம் மற்றும் பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ள வெலன்ட் கால்வாய், லேக் எரியில் காணப்படும் அற்புதமான பீச்சுக்கள் போன்றனவும் இவற்றை விட நயாகரா வீழ்ச்சியில் காணப்படும் Horseshoe Falls அனைத்திற்கும் மேலான சிறப்பு அம்சமாக அமைகின்றது.