கனடாவிலுள்ள ஒரு மாநிலத்தில் பொது மக்கள் சேவையில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களும், பொதுச் சேவையை பெற்றுக் கொள்ள வரும் முஸ்லிம் பெண்களும் முகத்தை மூடி ஆடை அணிவதை தடை செய்யும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடாவின் கெபெக் மாநிலத்தில் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி இந்த மாநிலத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் புர்கா அல்ல நிகாம் அணிந்து கொண்டு அரச பொதுச் சேவைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.