கண்ணீர் சிந்திய தாயக மக்களுக்கு கை கொடுத்த சுவிஸ் வர்த்தகர்கள்..!
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இழக்கப்பட்டவைகள் சொல்லில் அடங்காதவை.
தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தமிழ் மக்களின் உறவுகள் இன்று தனது அவயங்களை இழந்த நிலையில் வாழ்வாதாரத்துக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.
தாயகத்தின் பல பகுதிகளிலும் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில் பல குடும்பங்கள் இருக்கின்றன. ஒரு வேளை உணவுக்கு கூட இவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இன விடுதலைக்காக தமது உயிரையும், உடலையும் இழந்து, நம்பிக்கை என்ற ஒன்றுடன் இருக்கின்ற இந்த மக்கள் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டி புலம்பெயர் தேச மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவர்களின் கண்ணீரை துடைத்து, வாழ்க்கையை கட்டியெழுப்பும் நோக்கில் புலம் பெயர் அமைப்பான சுவிஸ் விஷன் நிறுவனத்துடன் இணைந்து தாயக புலம் பெயர் அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.
அந்த வகையில், உறவுகளை இழந்து நிற்கும் அந்த மக்களின் தேவை எதுவென அறிந்து, அதற்கேற்ற வகையில் குறித்த நிறுவனங்கள் தாயக மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் சேவையை முன்னெடுத்துள்ளன.
இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த உதவி செயற்திட்டங்களுக்கு தமது உளமார்ந்த நன்றிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பரபரப்பு மிக்க உங்கள் வாழ்க்கையில் சற்று நேரத்தை ஒதுக்கி இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். உங்களிடத்திலும் ஒரு புதிய மாற்றம் ஏற்படலாம்…!