கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை காணப்படுவதாகத் தெவிக்கப்படுகின்றது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.