கணினியை இயக்கும் போதே அதனுடன் சேர்த்து ஸ்மார்போனையும் இயக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், இந்த விடயத்தை மேற்கொள்ள பல ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஏர்ட்ராய்ட் (AirDroid).
இந்த செயலி மூலம் மேலே கூறப்பட்டதை செயல்படுத்த ஸ்மார்ட்போன் மற்றும் கணினி ஆகிய இரண்டும் ஒரே நெட்வொர்க் கொண்டு இணைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஏர்ட்ராய்ட் (AirDroid) என்றால் என்ன?
ஏர்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போனின் பொதுவான அம்சங்களை கணினி வழியாக அணுகலை வழங்கும் பல திரை பயன்பாடு ஆகும்.
இந்த பயன்பாடு விண்டோஸ் மற்றும் மேக் தளங்களுக்கு இணக்கமானது. நாம் முக்கிய வலை உலாவிகளின் எந்த மேடையிலும் இதை பயன்படுத்த முடியும்.
பயன்படுத்தும் முறை
முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஏர்ட்ராய்ட் செயலியை பதிவிறக்க வேண்டும்.
பின்னர் web.airdroid.com என்ற வலைதளத்துக்குள் கணினி மூலம் போக வேண்டும்.
இப்போது, ஒரு விண்டோ க்யூஆர் குறியீடு பாப் அப் ஆகும்.
பின்னர், ஸ்மார்ட்போனில் திறந்து வைத்திருக்கும் ஏர்ட்ராய்ட் செயலியில் web.airdroid.comவிலிருந்து எடுத்த குறியீடை ஸ்கேன் செய்வதற்கு, திரையின் மேல் உள்ள ஸ்கேன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் கணினி மூலம் ஸ்மார்ட்போனை இயக்க தொடங்கலாம்.
இந்த பயன்பாடு செயல்பாட்டுக்கு வந்த பின்னர், போன் செய்வது, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, வீடியோ பார்ப்பது மற்றும் இசையை கூட கேட்க முடியும்.
மேலும், ஸ்மார்ட்போன் கமெராவை தூரத்திலிருந்து கூட கணினி வழியாக கட்டுபடுத்த முடியும்.
அதனுடன், கணினியில் ஒரு URL பதிவு செய்தால், அந்த வலைப்பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறக்கும்.