விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் அனு இம்மானுவேல். மலையாள நடிகையான இவர் தற்போது தெலுங்கில் பிசியாகிக்கொண்டிருக்கிறார். மஞ்சு, கிட்டு உன்னடு ஜிகர்தா, ஆக்சிஜன் ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது பவன்கல்யாணின் அஞ்ஞாதவாசி, அல்லு அர்ஜூனுடன் நா பேரு சூர்யா, நாக சைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு, சில நடிகைகளைப்போன்று ஆடைகுறைப்பு விசயத்தில் கண்டிசன் போடாமல் கதைக்கேற்ப தாராளம் காட்டி வருவதால் தெலுங்கு சினிமாவில் முன்வரிசை நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் அனு இம்மானுவேல். இதன்காரணமாக, தற்போது கடை திறப்பு விழாக்களிலும் பிசியாகிவிட்டார் அனு இம்மானுவேல்.