இன்று வெள்ளிக்கிழமை பெரும் காற்றுடன் கூடிய பனிச்சரிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டு, நான்கு தென்மேற்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு Météo France இத்தகவலை வெளியிட்டுள்ளது. Ariège, Haute-Garonne, Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று வியாழக்கிழமை மாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்புயலுடன் கூடிய பனிச்சரிவு ஏற்படும் எனவும், சறுக்கு விளையாட்டுக்கள், மலையேறுதல் அனைத்துக்கும் கட்டாயமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மிக அதிகளவிலான பனிப்பொழிவும் ஏற்படும் எனவும், நேற்றைய நாளில் 60 தொடக்கம் 80 cm வரையிலான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரை பனிப்புயல் கடுமையாக இருக்கும் எனவும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.