தீர்வு தீர்வென்று தீர்விற்காக நாம் பாடுபடக் கூடாது. ஏனெனில் கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என அமைச்சர் கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும்தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வேண்டியிருந்தது. தற்போது அது நடைபெற்றுள்ளது.
ஆகவே தீர்வு தீர்வென்று நாம் தீர்விற்காக பாடுபடக் கூடாது. என்றாவது ஒருநாள் தீர்வு கிடைக்கும். கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு அதற்காக காத்திருக்காதீர்கள்
தமிழ் மக்கள் தீர்வுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெகு விரைவில் தீர்வு கிடைக்கும் என எண்ணியிருந்தோம் ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நோக்கும் போது தீர்வு எப்போதோ
ஒரு நாளைக்கு கிடைக்கும் என்ற நிலையே காணப்படுகிறது.
அதை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காது எப்பொழுது கடவுள் இந்த தீர்வை எங்களுக்கு வழங்கவேண்டும் என்று கருணை கூறுகின்றாரோ அன்றைக்குதான் தீர்வு
எங்களுடைய தீர்வு என்றைக்கோ ஒரு நாள் கடவுளால் எழுதியிருந்தால் அது அன்றைக்கு கிடைக்கும் இல்லையோ நாங்கள் இப்படியே வீதியில் நிற்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது நாங்கள் தீர்வு தீர்வு என்று நினைத்துக்கொண்டிருக்காமல் யுத்தத்தின் வடுவில் இருந்து வெளி வரவேண்டும் வெளி வந்திருக்கின்றோம் எனவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூறியுள்ளார்.
நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும்
தெரிவித்தாவது,
கடந்த கால நினைவுகளை நினைத்து பார்;த்தால் மீண்டும் அதிலிருந்து மீளவே முடியாது என்ற நிலைமையே இருந்தது. கடந்த கால முப்பது வருட யுத்தத்திற்கு
முகம்கொடுத்து இன்று வெளியில் வந்திருக்கின்றோம்.
யுத்தத்திற்கு பிறகு அடிப்படை வசதிகளை நாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அபிவிருத்தியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் எங்களுடைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்திருக்கிறது.
இந்த மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருகிறார்கள்.
வடக்கு மாகாணத்தில் முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக உள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நல்லாட்சி அரசு அங்கவீனர்களுக்கு பல உதவிகளை
வழங்கிவருகிறது.
அமைச்சர் வஜிர அபேயவர்த்தன எங்களுடைய விடுதலைப்புலிகளின் காலத்திலும் கூட இங்கு வந்து சென்றிருக்கின்றார். அவர் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை எங்களின் பார்க்கிலும் நன்கு தெரிந்தவர்.
ஒவ்வொரு நிமிடமும் கதைக்கும் போது எங்களுக்கே உதாரணம் சொல்லிக் கதைக்க கூடியவர் அப்படியான ஒரு அமைச்சர் எங்களுக்கு கிடைத்திருக்கின்றார் எனத் தெரிவித்த அவர்
எதிர்காலத்தில் நாளைய அரசியல் தலைவர்களை தெரிவு செய்கின்ற போது மக்கள் நிதானமாக தெரிவு செய்ய வேண்டும் இல்லை எனில் மீண்டும் வீதிக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும்.
எனவே நல்லாட்சி அரசில் துரோகிகளுக்கும் இனவாதிகளுக்கும் இடம்கொடுக்க கூடாது என்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்