‘கடவுள் இருக்கான் குமாரு’ பட தமிழக உரிமைக்கு மவுசு
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள்.
சுமார் 95% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. பாடல் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள் என படக்குழு எதையுமே வெளியிடவில்லை. ஆனாலும், எதிர்பார்ப்பை முன்வைத்து இப்படத்தின் தமிழக உரிமையை சேலம் சிவா மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படங்களிலேயே அதிக விலைக்கு போன தமிழக உரிமை இப்படம் தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
‘ப்ரூஸ் லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.