அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டுமானால் இரு அணியினரும் உட்கார்ந்து பேச வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதிமுகவில் இருந்து தினகரன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓபிஎஸ் அணியினர் கூறினர்.
இந்நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், தினகரன் மற்றும் சசிகலா ராஜினாமா பெற வேண்டும் என்றும் இது ஒரு நாடகம் என ஓபிஎஸ் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அம்மா அணியைச் சேர்ந்த திருப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான குணசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர், பன்னீர்செல்வம் தரப்பினர் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சுயலாபத்துக்காக யாரும் யோசிக்கக் கூடாது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டால் பரிந்துரை செய்வோம்.
எங்களுக்கு ஏற்படாத அவமானமா, எல்லோருக்கும் வேதனை இருக்கிறது.
ஜெயக்குமார் கூறிய வார்த்தைகளுக்கு அவர்தான் பதில்கூற வேண்டும், இரு அணியினரும் குழு அமைத்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தம்பிதுரை கூறும்போது,பன்னீர்செல்வம் அணியினர் உட்கார்ந்து பேசும் போது நீதி விசாரணை பற்றி பேசலாம்.
தயவுசெய்து நிபந்தனை விதிக்க வேண்டாம், கட்சிக்காக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.