ஒலிம்பிக் தீபத்தை நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞர்: பிரேசிலில் பரபரப்பு.
பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
27 வயதான மாத்யூ சில்வா என்ற நபரே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5ம் திகதி முதல் 21ம் திகதி வரை அரங்கேறுகிறது.
ஒலிம்பிக் தீபம் பிரேசிலின் 300 நகரங்கள் உட்பட சுமார் 20,000 கிலோ மீட்டர் தூரம் வலம் வந்து இறுதியாக தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தை சென்றடைந்து அங்குள்ள ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரேசிலில் உள்ள மரக்கஜுவில், ஒலிம்பிக் தீபம் வலம் வந்து கொண்டிருந்த போது, மாத்யூ சில்வா ( வயது27) என்ற நபர் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்றுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.