ஒலிம்பிக்கில் அதிக அளவில் ஊக்க மருந்து பயன்படுத்திய நாடு! வெளியான அதிரடி அறிக்கை
சர்வதேச விளளயாட்டுப் போட்டிகளில் ரஷ்யா வீரர்கள் தான் அதிக அளவில் ஊக்க மருத்து உட்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பாக கனடாவைச் சேர்ந்து ரிச்சர்ட் மேக்லாரன் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார்.
அதில், ஒலிம்பிக்போட்டிகளில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ரஷ்யா வீரர்களை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஜேர்மனியும் வலியுறுத்தியுள்ளன.
மேலும், ரஷ்யா அரசு ஊக்க மருந்து கலாச்சாரத்தை ஆதரித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.