ஒரே மேடையில் மோதிக்கொண்ட மைத்திரி – அனுர!
அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதிக்கும், அனுரகுமார திசாநாயக்கவும் இடையில் கருந்து மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகால அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க மேடையில் வைத்து சுட்டிக்காட்டியுள்ளார். ஊழல் வலையமைப்பொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரி, ஊழல் வலையமைப்பு ஒன்றல்ல பல நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், தற்போதைய அரசாங்கம் அவற்றை ஒன்று ஒன்றாக உடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவதாகவும், அதன் ஊடாக கிடைக்கும் சுய வலிமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.