ஒரே பந்தில் 6 பேர் அவுட்..! ஷேவாக்கின் அதிரடி
கிரிக்கெட் விளையாட்டில் அதிரடியாக விளையாடி பட்டையை கிளப்பிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தற்போது டுவிட்டரிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன் முதல் பல பேரை டுவிட்டர் மூலம் வெளியேற்றி வரும் சேவாக். சமீபத்தில் அவர் வீசிய டுவிட்டில் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஏபி டி வில்லியர்ஸ், கம்பீர், ரகானே மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஆகிய ஐந்து பேரும் அவுட் ஆகி உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் யுவராஜ் சிங் தான், தனது புற்றுநோய் அறக்கட்டளைக்காக ‘YWC (YesWeCan) பேஷனை துவங்கினார். இதன் துவக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பலரும் யுவராஜ் சிங்குக்கு சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்படி வாழ்த்து தெரிவித்து சிக்கினவர்கள் தான் இந்த நான்கு பேரும். நான்கு பேரும் ஒரே மாதிரியான வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதை சரியாக கவனித்த ஷேவாக் தனது டுவிட்டில் கூறியதாவது, நேற்றை நிகழ்வு மிக சிறப்பாக அமைந்தது, ஆனால், இந்த நான்கு பேரும் ஒரே இடத்திலிருந்து தான் இதை பெற்றுள்ளனர். ஏன் யுவராஜ், நீ எனக்கு இதை தரவில்லை என கலாய்த்துள்ளார்.
இதைதொடர்ந்து, பிரட் லீயும் இதே டுவிட்டை வாழ்த்து செய்தியாக பதிவிட்டு, ஷேவாக் விக்கெட் வரிசையில் ஆறாவது நபராக இணைந்துக்கொண்டார்.
ajinkyarahane88 ✔@ajinkyarahane88
Hope your event was a splendid success @YUVSTRONG12. Wish I could have been a part of @YWCFashion launch! My good wishes are with you.
AB de Villiers ✔@ABdeVilliers17
Hope your event was a splendid success @YUVSTRONG12. Wish I could have been a part of @YWCFashion launch! My good wishes are with you.
Hope your event was a splendid success @YUVSTRONG12. Wish I could have been a part of @YWCFashion launch! My good wishes are with you.
Gautam Gambhir ✔@GautamGambhir
Hope your event was a splendid success @YUVSTRONG12. Wish I could have been a part of @YWCFashion launch! My good wishes are with you.
Virender Sehwag ✔@virendersehwag
Wonderful evening it was at @YWCFashion ,but all 4 got same tuition. Kyun @YUVSTRONG12 ,u didnt give me this#Farra
Virender Sehwag ✔@virendersehwag
Bhai @YUVSTRONG12 ,sabko diya #Farra yeh chhapne,aapke Faadu event me bhi aaya main, to mujhe kyun nahi diya #Farra