ஒரே நடைமேடையில் இரண்டு ரயில்கள்: நடக்கவிருந்த விபரீதம்
சேலத்தில் ஒரே நடைமேடையில் இரண்டு ரயில்கள் வந்ததால், பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியுள்ளனர்.
சேலத்தில் இருந்து, விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 7.50 மணி அளவில் ஆத்தூர் ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
மேலும் இந்த ரயில் மங்களூரில் இருந்து வரும் வாராந்திர விரைவு ரயில் இரண்டாவது நடைமேடையை கடந்து செல்வதற்காக முதல் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எதிர்பாரதவிதமாக மங்களூர் விரைவு ரெயில் இரண்டாவது நடைமேடையின் வழியாக செல்வதற்கு பதிலாக, முதல் நடைமேடையில் நிறுத்திவைக்கப்பட்ட விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயிலை நோக்கி வந்தது. இதை கண்ட பயணிகள் அலறியுள்ளனர்.
ஆனால் மங்களூர் விரைவு பயணிகள் ரயில் 100 அடிக்கு முன்பே நிறுத்தப்பட்டது.
மேலும் மழையினால் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக மங்களூர் பயணிகள் ரயிலை முதல் நடைமேடைக்கு மெதுவாக கொண்டுவந்தோம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் சரியாக செயல்பட்டதால் நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.