பிரான்சில் இடம்பெற்ற ஜூனியர் ரக்பி தொடர் அரையிறுதி போட்டியின் போது வீரர் ஒருவர் நடுவரை ஒரே குத்தில் நாக் அவுட் செய்ததையடுத்து மைதானத்தில் கலவரம் வெடித்தது.
பிரான்சில் நடந்த ரக்பி போட்டியின் போது எதிரணியுடன் கைகலப்பில் ஈடுபட்ட Saint-Esteve வீரரை நடுவர் Benjamin Casty போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதனால் கோபமடைந்து நடுவரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டு வீரர் திடீரென நடுவர் முகத்தில் பலமாக குத்த நடுவர் மைதானத்தில் சுருண்டு வழுந்துள்ளார்.
இதைக்கண்ட எதிரணியினர் வீரரை தட்டிகேட்க்க இரு அணியினரும் மோதிக்கொண்டு மைதானத்தில் கலவரம் வெடித்தது. இதனையடுத்து போட்டி கைவிடப்பட்டது.
நடுவரை சோதித்த மருத்துவர்கள் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடுவரை தாக்கிய வீரர் ரக்பி போட்டியிலிருந்து முழுமையாக தடை செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.