ஒரே கட்சியில் உறுப்பினர்களாக காணப்படும் இருவர் ஜனாதிபதியாகவும் எதிர் கட்சி தலைவராகவும் இருக்க முடியாது. அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறுமாக இருந்தால் அது பாராளுமன்ற சட்ட திட் டங்களுக்கும் பாரம்பரியத்திற்கும் முரணா னதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பி டுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநி தித்துவப்படுத்தும் அங்கத்தவராகவே உள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஆவார். எனவே ஒரே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒரே நேரத்தில் நாட்டை ஆளும் ஜனாதிபதி யாகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்க முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடை பெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. நாட்டில் எதிர்பாராத திருப்பத்தை இத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத் தியிருந்தன. இந்நிலையில் நாட்டில் தேசிய அரசாங்கத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டதோடு பிரதமர் பதவி தொடர்பிலும் பல்வேறு சிக்கலான கருத்துக்களும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன இணைந்து உருவாக்கியிருந்த தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ.ல.சு.க விலகினால் எந்தவித நிபந்தனைகளும் இன்றி, அமைச்சுக்களை ஏற்காது வெளியில் இருந்து ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இந் நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.