ஒரு மணி நேரம் இருளில் மூழ்கவுள்ள கனடியர்கள்!
பெரும்பாலான கனடியர்கள் ஒரு மணித்தியாலம் தங்கள் வீடுகளில் இன்று இரவு விளக்குகளை அணைத்து வருடாந்த Earth Hour நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் விரும்பியவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.
காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவதற்கு ஒரு அர்ப்பணிப்பாக இந்த உலகளாவிய வருடாந்த நிகழ்வு இன்று இரவு இடம் பெறுகின்றது.
கிறீன் ஹவுஸ் வாயு உமிழ்வுகளை குறைக்கும் முயற்சிகளிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் முயற்சியாகவும் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வு 2007 அவுஸ்ரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒரு உலகளாவிய நிகழ்வாக வளர்ந்து வருகின்றது.
பாடகர் குழு ஒன்றின் மெழுகுவர்த்தி நிகழ்வுடன் மொன்றியலில் நட்சத்திரங்களின் கீழ் சறுக்குதலுடனும், வன்கூவரில் ஒரு மெழுகுவர்த்தி ஒளியில் நடத்தல் மற்றும் ரொறொன்ரோவில் யோகாவுடனும் இடம்பெற உள்ளது.
கடந்த வருட நிகழ்வில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஒரு எண்ணிக்கையான கபினெட் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, Earth Hour ற்கு பின்னால் உள்ள எண்ணம் விழிப்புணர்பை உயர்த்துவது எனவும் அதை விட மின் பாவனையை குறைப்பதல்ல என உலக வனவிலங்கு நிதியம் தெரிவித்துள்ளது.