சினிமா துறையில் சாக்லேட் ‘பாய்(ஸ்)’ ஆக நுழைந்து, ‘செல்லமே’யில் ஒருதலையாய் காதலித்தவருக்கு காதல் கைகூடியது. ‘கண்டேன் காதலை’ என்று வெயிலில் உற்சாகமாக வலம் வந்தார். இவரது காதல் கதைகளை ஒரு பட்டியலே இடலாம். அந்த அளவிற்கு இன்னும் சினிமாவை ‘ஸ்பைடராக’ சுற்றி வந்து காதலிக்கிறார். அவர் நடிகர் பரத். தினமலர் வாசகர்களுக்காக இங்கே பேசுகிறார்…
‘பொட்டு’ படம் பற்றி?
ஒரு ப்ளட் குரூப் மையமா வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். எனக்கு இந்த படம் புது கான்செப்ட் தான். தொடர்ந்து பேய்கதைகள் வந்திருக்கும் சமயத்தில், நானும் முதல் முறையா ஒரு திகில் படத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் தண்ணீரில் போடும் சண்டை காட்சி எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
உங்க லுக், மேக் அப் போஸ்டரில் பயங்கரமா இருக்கே ?
நான்கு கெட் அப் படத்தில் இருக்கு. வயதான தோற்றம், பெண் கெட் அப், அதை தவிர இன்னும் ரெண்டு கெட் அப் படத்தில் இருக்கு. பெண்மை தனத்துடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது.
படத்தில் மூணு ஹீரோயின்கள் இருக்காங்களே ?
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ஒருத்தர் வருவாங்க. நமீதாவை இதுவரை கிளாமர்ல தான் அதிகம் பார்த்திருப்பாங்க. இந்த படத்தில ஒரு டான் மாதிரி வேறு ஒரு
களத்தில அவங்க இருப்பாங்க. இனியா பொட்டு என்ற மெயின் ரோலில் நடிச்சிருக்காங்க. ஸ்ருஷ்டி டாக்டரா வராங்க. அவங்களும்
என் ஜோடியா வருவாங்க. அவங்கவங்க ரோல் சிறப்பா நடிச்சிருக்காங்க.
இயக்குனர் வடிவுடையான் சுடுகாட்டில் எல்லாம் ஷூட்டிங் எடுப்பார். இந்த படத்தில் எப்படி?
அவர் காலையில் வந்த உடனே சாமியார் மாதிரி மண்டை ஓட்டுடன் தான் ஷூட்டிங் ஆரம்பிப்பார்.நடிகர்கள் செட்டுக்குள் வர லேட் ஆகிட்டால் உடனே மண்டை ஓட்டுடன் வேலை ஆரம்பித்து விடுவார். என்னை பொறுத்தவரை இந்த படத்தில் நான் நடித்தது எல்லாமே அவர் சொன்னதை தான் செய்திருக்கேன். ஹாரர் படம் எடுப்பதில் அவர் டாக்டர் பட்டம் வாங்கின மாதிரி, அவர் நடித்து காட்டுவதை பார்த்தாலே நாம பயப்படுவோம்.
பெண் வேடம் போட்டு நடித்த அனுபவம் ?
படத்தில் கிட்டதட்ட ரெண்டு மூணு சீன் தான் பெண் வேடத்தில் வருவேன். ஆனால் அதற்காக ரெடி ஆவதற்கு மூணு மணி நேரம் ஆனது. கண்ணுக்கு மை போடவே அரை மணி நேரம் ஆனது. அப்ப தான் நினைத்தேன் பெண்களுக்கு எவ்ளோ கஷ்டம் என்று…
பெண் வேடம் போட்டு நடித்த போது ஷூட்டிங்க்ல நடந்த கலாட்டா ஏதும் ?
காலில் இருந்து தான் அந்த காட்சி தொடங்கும். அதனால் கால் முடி நீக்கப்பட்டு அந்த காட்சியை பார்க்கும் போதே பெண் போல தோற்றம் இருக்கும். மொட்ட ராஜந்திரன் என்னை பார்த்து, என்னப்பா உன்னை பார்த்ததும் வேற யாரோ மாதிரி இருக்கு. உன் மேல ஆசையே வரும் போல என்றார். எனக்கே என்னை பார்த்து சிரிப்பு வந்தது. வீட்டில் கூட எல்லாரும், வட இந்திய பெண் போல நான் இருப்பதாக சொன்னார்கள்.
பதினைந்து வருடங்களாக சினிமாவுல இருக்கீங்க; இன்னும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கலை என்று வருத்தப்படுகிறீங்களா
அந்த வருத்தம் இருக்கு. எனக்கு முன்னாடி பல நடிகர்களும் போராடித் தான் ஒரு பெரிய இடத்தை நோக்கி வந்திருப்பாங்க. எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்கு. மக்கள் என் படங்களை விரும்பி பார்க்கணும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கு. தொடர்ந்து நல்ல விஷயத்தை நோக்கி செல்வேன். எதாவது ஒரு நாள் எனக்கானதா இருக்கும் .
நிறைய புதுமுகங்கள் உங்கள் முன்னாடி போகும் போது என்ன நினைப்பீர்கள் ?
அதை நான் கண்டு கொள்வதில்லை. இயக்குனர் ஷங்கர் சொன்ன விஷயம் தான்; அடுத்தவர்களை பற்றி யோசிக்காதே, உன் வாழ்க்கை நகராது என்பார். அதை நான் பின்பற்றுகிறேன். எனக்கான வழிகளை தேடி போகிறேன்.
ஸ்பைடர் பட அனுபவம் ?
வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் தம்பியா நடிச்சது புது அனுபவம். மகேஷ்பாபுவு க்கும் எனக்கும் சண்டை காட்சி செம திகில்.