நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தினால் உருவாகியுள்ள பதற்றத்திற்கு மத்தியில் எக்கால கட்டத்திலும் சீனாவின் நட்புநாடான பாக்கிஸ்தான் ஒரு சீனா கொள்கைக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸில் துணை ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானிற்கு விஜயம் மேற்கொண்டு தாய்வானின் ஜனநாயகத்திற்கான தனது தளர்ச்சியற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே பாக்கிஸ்தான் ஒரு சீனா கொள்கைக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
பெலோசியின் கருத்துக்களும் விஜயமும் சீனாவிற்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுஇது ஒரு சீன கொள்கையை மீறும் செயல் என சீன கருதுகின்றது.
எனினும் சுயாஆட்சி தீவு தொடர்பான தனது நீண்ட கால கொள்கைக்கு இந்த விஜயம் முரண்பாடானது இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தனது அறிக்கையொன்றில் சீனாவின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தான் தாய்வான் நீரிணையில் உருவாகியுள்ள நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலவரம் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தான் ஒரு சீனா கொள்கைக்கு ஆதரவாக உள்ளது அதற்கான அதிக அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்துள்ள பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் நிலவரத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
உலகம் ஏற்கனவே பாதுகாப்பு நிலவரம் ஒன்றை எதிர்கொண்டுள்ளது அதன் காரணமாக உணவு எரிசக்தி போன்றவற்றிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
உலக சமாதானத்திற்கு அமைதிக்கு ஸ்திரதன்மைக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நெருக்கடியை உலகம் எதிர்கொள்ள முடியாது என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.நாடுகளிற்கு இடையிலான பதற்றங்களை பரஸ்பர மதிப்பு உள்விவகாரங்களில் தலையிடாமை ஐக்கியநாடுகள் சாசனத்தை பின்பற்றி விவகாரங்களிற்கு அமைதி தீர்வை காணுதல் சர்வதேச சட்டங்கள் இரு தரப்பு உடன்படிக்கைகள் போன்றவற்றை பாக்கிஸ்தான் நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருசீன கொள்கை என்பது ஒருசீன அரசாங்கம் மாத்திரமே உள்ளது என்ற சீனாவின் நிலைப்பாட்டிற்கான இராஜதந்திர அங்கீகாரம் அந்த கொள்கையின் கீழ் அமெரிக்கா தாய்வானிற்கு பதில் சீனாவுடன்தான் இராஜதந்திர உறவுகள் என்பதை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கின்றது – தாய்வானை சீனா தன்னிடமிருந்து பிரிந்துபோன ஒருநாள் தன்னுடன் மீள் இணைக்கவேண்டிய பகுதியா கருதுகின்றது எனவும் பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது