ஒருமுறை கூட தேர்வாகாத ஜாக்கி சானுக்கு ‘ஆஸ்கார் விருது’
தற்போது அவருக்கு கவுரவ ஆஸ்கார் விருதை அறிவித்துள்ளது Academy of Motion Picture Arts and Sciences. வழக்கமாக வழங்கும் ஆஸ்கார் விருது போல் இல்லாமல், இந்த விருது ஜாக்கி சானின் சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை ஒருமுறை கூட ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கி சான் தவிர இன்னும் மூன்று பேர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் – எடிட்டர் Anne Coates, Casting director Lynn Stalmaster, மற்றும் ஆவண திரைப்பட தயாரிப்பாளர் Frederick Wiseman.
இவர்களுக்கு நவம்பர் 12ம் தேதி நடக்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும்.