வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டாம் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நிர்வாகக் கட்டளையொன்றுக்கு அமெரிக்கா தயாராகிவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுதந்திர வர்த்தக ஒப்பந்த இரத்தானது அனைத்து தரப்பிற்கும் இடையே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சஸ்கச்சுவானில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா மற்றுமொரு சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடஅமெரிக்காவில் முக்கோண வர்த்தக அமைப்பை ஏற்படுத்தும் வகையில் கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே கடந்த 1994ஆம் ஆண்டு குறித்த வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.