ஐ.நா நோக்கி 36 அமைப்புக்கள்ஏன் சென்றன ?
36 விதமான படிவங்கள் அங்கே ஏன் தயாரானது ,இன்று இன்னமும் கால அவகாசம் வாங்கிக் கொண்டு வருவதற்கு நமக்கு ஏன் 36 அமைப்புக்கள்? தமிழனின் இறுதிக் கட்ட உயிர்க்கொடை போரும் எமக்குள் நீயா நானா என எழுந்த போட்டிகளாலேயே இறுதியில் இத்தனை உயிர்களையும் பலிகொடுத்து போரில் தோற்றுப்போன இனமாக நிர்க்கதியானோம் .
அரசியல் ரீதியாக ஒரு முடிவை பெற விளையும் போதும் நமக்குள் பல அமைப்புக்கள் நான் பெரிது நீ பெரிது என்ற கோசங்கள் ஒற்றுமை இல்லாத இனத்தை சிதைக்கும் செயற்பாடுகள் எம் இனத்தை தலை முறை கடந்த துன்பத்துக்குள் தள்ளுகின்றது .
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி தமிழர்களுக்கு தற்போது சாலப் பொருந்துகிறது நாம் இரண்டு பட்டு ,பலதாகப் பிரிந்தமையை சிங்கள அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தியுது .
எம் நிலைமை இன்னமும் இரண்டு வருடங்களில் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலைக்கு வந்துவிடும் அப்போது நாம் கூக்குரலிட்டு எந்தப் பயனும் இல்லை .
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம் நிலைமைகளை சொல்லாவிடினும் கால அவகாசத்தை வழங்க தலை ஆட்டியமை அதிருப்தி அளிக்கிறது .
கனடாவில் 4 – 5 அமைப்புக்கள் உருவாகி நம் இனத்தை கூறு போட்டு கும்மாளம் இடுகின்றது . இவர்களே ஒற்றுமைப்பட்டு எம் இனத்துக்காக குரல் கொடுக்காது
2 மாவீரர் நாளும், 2 மே 1 8 அவலமும் நினைவு கூறுகின்றனர் – இங்கே இல்லாத ஒற்றுமையை ஜெனிவாவுக்குள் நாம் தேடுவது முட்டாள் தனம்தான் .
நாம் யார் எதற்க்காக இத்தனை உயிர்க் கொடை களை கொடுத்தோம் என்பதை ஒருகணம் சிந்திப்போம் – எம் இனத்துக்காக ஒன்றுபடுவோம் .