ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மாகாணங்களிற்கு பனி பொழிவு எச்சரிக்கை!
கனடா சுற்றுச் சூழல் ஒன்ராறியோவின் சில பகுதிகள் மற்றும்கியுபெக் பகுதிகளிற்கு பன் மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர் கால ஆரம்பம் கனடாவின் வடபாகத்தை தாக்கும்.
பனி பொழிவு மற்றும் பனி புயல் எச்சரிக்கை ஒன்ராறியோ மற்றும் கியுபெக் தென் பாகங்கள் பூராகவும் விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் தென்பாகத்தில் சில பிரதேசங்களில் பனி பொழிவு ஆரம்பித்து விட்டது.இப்பகுதிகளில் 10 முதல் 25 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவும் கியுபெக்கில் 20 முதல் 25சென்ரிமீற்றர்கள் அளவிலான பனி பொழிவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பனி குவியல் இரவு முழுவதும் தொடர்ந்து திங்கள்கிழமை காலை வரை நீடிக்கும்.
பனி புயலும் ஏற்படும். பலத்த வடமேற்கு காற்று மணித்தியாலத்திற்கு 80கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுவதால் பறக்கும் பனியினால் காட்சி திறன் குறைவடையும் என காலநிலை பிரிவு தெரிவிக்கின்றது.
திங்கள்கிழமை காலை போக்குவரத்து குறித்தும் கனடா சுற்றுசூழல் சாரதிகளை எச்சரிக்கின்றது. தெளிவு நிலை பூச்சியத்தில் காணப்படுமாதலால் சாரதிகள் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் தெரிவிக்கின்றது.
வெப்பமான காலநிலை மாறியுள்ளதால் வாகன சாரதிகள் பனிகாலத்திற்கு ஆயத்தமாக வேண்டும்.