ஒன்ராறியோ மற்றும் கனடாவின் கிழக்கு பாகங்களில் தொடரும் குளிர்கால வானிலை இன்னல்கள்!
பெரும்பாலான கனடியர்கள் ஞாயிற்றுகிழமை மற்றொரு குளிர்கால வானிலையின் அனர்த்தத்துடன் எழுந்துள்ளனர். ஒன்ராறியோ, கியுபெக் மற்றும் கரையோரப்பகுதிகளிற்கு ஏராளமான கால நிலை எச்சரிக்கையை கனடா சுற்று சூழல் விடுத்துள்ளது. பனிப்புயல், உறைபனி மழை, அதிதீவிர குளிர் போன்றன இப்பிரதேசங்களில் எதிர் பார்க்க படுகின்றதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் நிலைமைகள் வன்காற்று போன்றன நியு பிறவுன்ஸ்விக் மற்றும் நோவ ஸ்கோசியாவில் தொடர்கின்றதாக கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் 55சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஃபண்டி கடற்கரையோர பகுதிகளில் காற்று மணித்தியாலத்திற்கு 100கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுகின்றது.
நோவ ஸ்கோசியா நோக்கி புயல் தள்ளப்படுவதால் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தெளிவற்ற பார்வை நிலைமையினால் பயணங்கள் மிக ஆபத்தானதாக காணப்படும்.
குளிர்ந்த காற்றினால் வெப்பநிலை மிக மிக குறைந்து பூச்சியத்திற்கு கீழ் 45செல்சியசாக ஆக்கேடியன் தீபகற்ப பகுதிகளில் காணப்படும்.
ஒன்ராறியோவில், ஹமில்ரன் மற்றும் நயாகரா பிரதேசங்களிலும் ரொறொன்ரோ பெரும்பாகங்களிலும் ஞாயிற்றுகிழமை உறை பனி மழை காணப்படலாம்.பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலையால் வீதிகள் மற்றும் நடைபாதைகளில் ஆபத்தான பனி குவியல்கள் உருவாக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் மற்றய பகுதிகளில் பலத்த பனிப்பொழிவை எதிர்நோக்க நேரிடும். ஆக கூடி 25சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு திங்கள்கிழமை காலை அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ரொறொன்ரோவில் 10சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
ஞாயிற்றுகிழமை கியுபெக் பூராகவும் பலத்த பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.