ஒன்ராறியோ சட்ட மன்றத்தின் முதல் பெண் பாதுகாப்பு ஒழுங்கு பராமரிப்பு அதிகாரி.
கனடா-ரொறொன்ரோ-முன்னாள் பொலிஸ் அதிகாரியான ஜக்கி கோர்டன் ஒன்ராறியோ சட்ட மன்றத்தின் புதிய பாதுகாப்பு ஒழுங்கு பராமரிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியை பெறும் முதல் பெண் அதிகாரியும் இவராவார்.
கோர்டன் 34-வருடங்கள் ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் பணிபுரிந்தவர். இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் 12வது அந்தஸ்தை பெற்றவர். சட்டமன்ற பாதுகாப்பை வழிநடத்த தகுதியானவர் என கூறப்படுகின்றது.
இப்பதவி ஒரு கௌரவம் மற்றும் சிறப்பு மிக்கதென தெரிவித்தார். பாரிய சட்டமன்ற கட்டிடத்தை சுற்றி வருவது தனது முதல் பணிகளில் ஒன்றென தெரிவித்தார். ஏற்கனவே இரண்வ தரம் வழி தவறிவிட்டதாக தெரிவித்தார்.
முன்னாள் அதிகாரி டென்னிஸ் கிளார்க் 19-வருட சேவையின் பின்னர் கடந்த வருடம் இளைப்பாறினார்.