ஒன்ராறியோவில் ஆண்டு முழுவதும் நிலையான மின் கட்டணம்
ஒன்ராறியோவில் இம்முறை குளிர்க்காலத்தின் போதும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படாது மாற்றம் இன்றி நிலையானதாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் மே மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் வருடத்தில் இரு முறை ஒன்ராறியோ மின்சார சபையினால் மின்சார கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
அதாவது குளிர்க்காலங்களில் அதிகளவான மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
ஆனால் இம்முறை மின் கட்டணங்களில் மாற்றம் நிகழாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு வருடத்திற்குமான மின்சார கட்டணங்கள் நிலையானதாக இருக்கும் என்ற குறித்த அறிவிப்பானது கடந்த பத்து ஆண்டுகளில் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.