ஒன்ராறியோவில் அதிக சம்பளம் பெறும் மனிதர் ஒன்ராறியோ மின் உற்பத்தி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெவ் லியாஷ் ஆவார். மாகாணத்தை வெளிச்சமாக வைத்திருப்பதற்கு 1.16மில்லியன் டொலர்கள் பெறுகின்றார்.
ஒன்ராறியோவின் பொது துறை ஊழியர்களின் சம்பள விபரங்களின் வருடாந்த பட்டியலை வெளியிடும் Sunshine List இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
அதிக வருமானம் ஈட்டும் ஊழியர்களின் சம்பளம் ஏழு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் 123,000பேர்களிற்கு கடந்த வருடம் 100,000டொலர்களிற்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
மாகாண அரசாங்கத்தின் 2016 சம்பள வெளிப்படுத்தல் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் அதி உச்சத்தில் ஒன்ராறியோ மின் உற்பத்தி தலைமை நிர்வாக அதிகாரி ஜெவ்ரி லியாஷிற்கு கடந்த வருடம் 1,155,899 வழங்கப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றய குறிப்பிடத்தக்க உயர் சம்பளம் பெறுபவர்கள்:
ரொறொன்ரோ பல்கலைக்கழக சொத்து மேலாண்மை அதிபர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வில்லியம் மொரியாட்ரி டொலர்கள் 1,045,582.
ஒன்ராறியோ ஓய்வூதி சபை நிறைவேற்று துணை அதிபர் ஜில் பெபால்$835,389.
ஒன்ராறியோ மின் உற்பத்தி வாரிய தலைமை அணு அதிகாரி கிளென் ஜகார்-$832,750.
அதி உயர் சம்பளம் பெறுபவர்களில் ஆறுவர் ரொறொன்ரோ-பிரதேச வைத்தியசாலை நிர்வாகிகள் அடங்குகின்றனர்.
பல்கலைக்கழக சுகாதார நெட்வேர்க் அதிபர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் பிஸ்ரெர்ஸின் சம்பளம் $753,992.
Sinai சுகாதார அமைப்பு அதிபர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜோசெப் மாபா $719,724.
முதியோர் பராமரிப்பு பேகிரெஸ்ட் மைய தலைமை நிர்வாக அதிகாரி வில்லியம் றெயிச்மன்- $718,475.
குறிப்பிட்ட சன் ஷைன் பட்டியலில் 123,572பெயர்கள் உள்ளன.150,00ற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள்,7,730ஒன்ராறியோ மின் உற்பத்தி ஊழியர்கள், 6,900ஆசிரியர்கள், 5,790 விரிவுரையாளர்கள், 3,725துணை விரிவுரையாளர்கள், 3,500 பதிவு செய்யப்பட்ட தாதிமார் அடங்குகின்றனர்.
இப்பட்டியல் 20வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. மைக் ஹரிசின் புறோகிறசிவ் கன்சவேட்டிவ் அரசாங்கம் இதனை ஆரம்பித்தது. முதல் பட்டியலில் ஆக 4,576 பெயர்களே இடம்பெற்றன.
ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் கடந்த வருடம் 208,974 டொலர்கள் ஈட்டியுள்ளார்.
குறிப்பிடத்தக்க சம்பளம் பெறும் மற்றவர்கள்:
குமார் குப்தா-சமூக பாதுகாப்பு அமைச்சின் மரணவிசாரனை அதிகாரி-$494,894.
ஹம்பர் கல்லூரி அதிபர் கிறிஸ்தோபர் வைட்ரேகர்-$469,839.
பொது தணிக்கையாளர் போன்னி லிசிக்-$310,174.
Steve Paikin ஹோஸ்ட் தயாரிப்பாளர் TVO:$302,622.
கல்வி அமைச்சின் சிறப்பு ஆலோசகர் டொனா குவான்$270,957.
முதல்வரின் அலுவலக பணியாளர் துணை தலைவர் பற்றிசியா சோப்ரா $156,290.
ரொறொன்ரோ சமூக வீட்டு வசதி கூட்டுத்தாபன பிளம்பர் வெயின் குளோவர்:$107,453.
ஒன்ராறியோ மின் உற்பத்தி வாயிற்காவலர் மைக்கேல் ஒசோ $104,498.
திடக்கழிவு சேகரிப்பு ஆபரேட்டர்.ரொறொன்ரோ நகரசபை. குரே றூனி: $100,206.