ஒன்ராறியோவின் தென் பகுதியில் கடுமையான வெப்பம்!
ஒன்ராறியோவின் தென் பகுதியின் பெரும்பகுதிகளில், கோடை காலம் இதுவரை கண்டிராத அளவு ‘நீண்ட’ மற்றும் ‘மிகவும் கடுமையான’ வெப்ப அலை நிறைந்து காணப்படும் என கனடா சுற்றுச்சூழல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த பட்ச இரவு நேர நிவாரணத்துடன், உயர் வெப்பநிலை மற்றும் ஈரக்கசிவான நிலைமை வெள்ளிக்கிழமை வரை தொடரலாம் எனவும் கனடா சுற்றுச்சூழல் பிரிவு எதிர்வு கூறியுள்ளது.
கிரேட் லேக் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காலை நேர வெப்பநிலை குறைந்தது 20 செல்சியஸில் காணப்படும் எனவும், வெள்ளிக்கிழமை மழை பெய்யும் வாய்ப்பு எதிர்பாரக்கப்படுவதால் வார இறுதி நாட்களில் வெப்பத்திலிருந்து சிறிதளவு விமோசனம் கிடைக்கலாம் எனவும், கனடா சுற்றுச்சூழல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் ஈரப்பதன் மதிப்பு சில பகுதிகளில் 40 செல்சியசை அண்மிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதி உயர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் ஏற்படுவதற்கு அமெரிக்காவிலிருந்து திரும்பும் காற்றுத்திணிவே காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது